வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த ஐந்து பேர் மீது மூன்று வௌவால்கள் சடுதியாக தாக்கியதால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளடதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
கடந்த 12ம் திகதி வடி வாகனமொன்றில் குறித்த ஐந்து பேரும் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு சென்றுகொண்டிருந்த போது ஒட்டுசுட்டான் வெள்ளை மலை ஏற்றத்தை அண்மித்த பகுதியில் மூன்று வௌவால்கள் வாகனத்திற்குள் உள்நுழைந்து குறித்த வயோதிபப் பெண்ணையும் சாரதியையும் தாக்கியுள்ளன. சாரதி நிலை தடுமாறியதால், வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகாமையிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அவ் வாகனத்தில் பயணித்த ஐந்து பேரும் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் காயமடைந்த ஐவரில் மூவரை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்திசாலைக்கும் ஏனைய இருவரை யாழ்.வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வயோதிபப் பெண்ணின் தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டமையால் நேற்று அதிகாலை 3 மணிக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தில் முல்லைத்தீவு, முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பாக்கியம் (வயது 70) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த க.தளையராஜசிங்கம் (வயது 58), பரமேஸ்வரன் தினுசன் (வயது 25) ஆகியோருடன் மேசன் தொழிலாளி ஒருவரும் கூலித் தொழிலாளி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
Home »
Sri lanka
» வௌவால்களின் தாக்குதலால் கட்டுப்பாட்டை இழந்தது வாகனம்: பெண் பலி, நால்வர் படுகாயம்!
வௌவால்களின் தாக்குதலால் கட்டுப்பாட்டை இழந்தது வாகனம்: பெண் பலி, நால்வர் படுகாயம்!
Written By TamilDiscovery on Saturday, July 20, 2013 | 1:24 AM
Related articles
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !