பெய்ஜிங்: குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது எனவே, தாய்மார்கள் தயவு செய்து குழந்தைகளுக்கு தாய்ப்பால் தாருங்கள் என ஒருபுரம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடை பெற்று வரும் வேளையில், சீனாவில் படு வேகமாக பேமசாகி வருகிறதாம் ‘தாய்ப்பால் உணவு வகைகள்'.
சிலர் தாய்ப்பாலில் பானங்கள் செய்வதாகவும், ஆபரணங்கள் செய்வதாகவும் வந்த செய்திகள் இப்போது தனது எல்லையை விரிவு படுத்தி விட்டது. அதிகாரப் பூர்வமாகவே, சீனாவில் தாய்ப்பால் உணவுகள் விற்பனையில் சக்கைப் போடு போடுகின்றனவாம்.
புட்டிப்பாலில் கலப்படம்:
சீனாவில் புட்டிப்பாலில் அதிகளவு கலப்படம் நடப்பதாக நிரூபிக்கப்பட்ட பிறகு, அங்கு தாய்ப்பாலின் மவுசு கூடியது. அதனைத் தொடர்ந்து சில பெண்கள் தாய்ப்பாலை விற்று பணம் சம்பாரிக்க ஆரம்பித்தனர்.
தாய்ப்பால் வங்கிகள்:
முன்பு, அதிகாரப்பூரவமாக ரத்த வங்கிகள் போன்று, தாய்ப்பால் வங்கிகள் மட்டும் செயல் பட்டு வந்தன. அதுவும் நோய் எதிர்ப்புச் சக்திக் கொண்ட தாய்ப்பாலை அனைத்து குழந்தைகளும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நடத்தப் பட்டது.
லேட்டஸ்ட் டிரண்டாம்:
ஆனால், தற்போதோ நிலைமை மோசம். தாய்ப்பாலை அப்படியே பருகுவது, அல்லது அதன் மூலமாகப் பயன்படுத்ஹ்டி உணவுப் பொருட்கள் தயாரிப்பது தான் லேட்டஸ்ட் டிரண்டாக உள்ளது சீனாவில்.
டோர் டெலிவரி:
வீட்டு உபயோகப் பொருட்களைத் தாயாரிக்கும் சில நிறுவனங்கள் தாய்ப்பால் சப்ளையில் இறங்கியுள்ளனவாம். இது போன்ற நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிர்வாகி லின் ஜூன் இது குறித்து கூறுகையில், ‘மாதம் ரூபா ஒன்றரை லட்சம் வழங்கும் வாடிக்கையாளரை சிறப்பு அந்தஸ்துடன் கவனிக்கிரோம். இவர்கள் விரும்பினால் பெண்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்துக்கோ நேரில் சென்று தாய்ப்பால் வழங்குவார்கள்' என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்ப்பும், கண்டனமும்:
நாக்கிற்கு அடிமையான மனிதர்களுக்கு மத்தியில் சில மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘மனித குலத்தையும் கால்நடை போல மாற்றி விடாதீர்கள்' என்பதே அவர்களது முக்கியக் கோரிக்கை.
நாக்கிற்கு அடிமையான மனிதர்கள்: சீனாவில் விற்பனைக்கு வந்துள்ள ‘தாய்ப்பால்’!
Written By TamilDiscovery on Friday, July 5, 2013 | 12:58 PM
Related articles
- உடனடியாக மரணத்தை தழுவ முட்டாள் தனமானா 10 வளிகள்!
- 2012 இன் உலகின் சிறந்த கட்டிடமாக மர்லின் மன்றோ தெரிவு!
- முதுமை எவ்வாறு ஏற்ப்படுகின்றது? கவனியுங்கள்!
- உலகில் உயிர்வாழும் வயதான நபருக்கான உரிமையைக் கோரும் எதியோப்பிய விவசாயி!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- கருவில் வளரும் 6 மாத சிசுவுக்கு இருதய அறுவை சிகிச்சை!
Labels:
Amazing
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !