காதல் தகராறால், கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் பழனியப்பனின் மகன் செல்லபாண்டியன், 22. இவர், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மூன்றாமாண்டு படித்தார். நேற்று முன்தினம் மர்மமான முறையில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் முகாம் அருகே உள்ள கிணற்றில், இறந்து கிடந்தார். மலையம்பாளையம் பொலிஸார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர். பொலிஸ் விசாரணையில், ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் விஜயன் மகன் கஜேந்திரன், 23. முகாமில் உள்ள, இவரது முறைப்பெண்ணை, செல்லபாண்டியன் காதலித்து வந்தார்.
இதனால், ஏற்பட்ட பிரச்னையில் செல்லப்பாண்டியனை, கஜேந்திரன் கொலை செய்து, கிணற்றில் வீசியது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த கஜேந்திரனை, மலையம்பாளையம் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !