Headlines News :
Home » » சந்துரு-தாமினியின் காதல் கதையின் நிலை என்ன?

சந்துரு-தாமினியின் காதல் கதையின் நிலை என்ன?

Written By TamilDiscovery on Friday, August 16, 2013 | 9:45 PM

காதல் விவகாரத்தில் டைரக்டர் சேரன் மகள் தாமினிக்கு மனமாற்றம் ஏற்படுமா? என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் திடீரென பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாமினி ஆஜராகி உதவி இயக்குனர் சந்துருவை காதலிப்பதாகவும் இதனால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார்.

பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சேரன் பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார். சந்துருவையும் வரவழைத்து விசாரித்தனர். சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் ஏமாற்றப்பட்ட பெண்கள் அவருக்கு எதிராக பொலிஸில் புகார் அளித்துள்ளனர் என்றும் சேரன் குற்றம் சாட்டினார்.

தனது மூத்த மகளுக்கும் பேஸ்புக்கில் ஐலவ்யூ சொன்னார் என்றும் கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்றுக்கு இவ்வழக்கு சென்றதால் கடந்த 6–ந் திகதி இரு தரப்பினரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். பின்னர் தாமினி படித்த பள்ளிக்கூடத்தின் தாளாளர் வீட்டில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் வருகிற 21–ந் திகதி மீண்டும் தாமினியை நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.

இதற்கிடையில் சந்துரு மீதும் அவர் அக்காள் பத்மா மீதும் டைரக்டர் அமீர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். பத்மா ஏற்கனவே ஒரு வரை திருமணம் செய்தவர் என்றும் சந்துரு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பவர் என்றும் குற்றம் சாட்டினார். சேரன் மீண்டும் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று சந்துருவுக்கு எதிரான ஆதாரங்களை கொடுத்தார். இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாமினிக்கும் படிப்பு முக்கியம் என்றும் படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள் என்றும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. தாமினியிடம் மனமாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கின்றனர். அவர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது 21–ந் நீதிமன்ற விசாரணையில் தெரிய வரும்.

சேரனின் நிலை!

பிழைப்புக்கு காதல் படங்களை எடுத்தாலும் நிஜவாழ்க்கையில் சேரன் காதலுக்கு எதிரானவர். தன்னுடைய மகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த காதலை உடைக்க தன்னுடைய சினிமா செல்வாக்கை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து நடத்துபவர் என்றெல்லாம் இணையத்தளங்களில் சேரன் மீது ஏராளமான விமர்சனங்கள்.













மேற்கண்ட ஸ்க்ரீன்ஷாட்கள் சேரனின் மகள் தாமினியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தவை. காதலனுடன் தான் சேர்ந்திருக்கும் படம் ஒன்றினை தாமினி பதிவேற்றி இருக்கிறார். அதை சேரன் ‘லைக்’ செய்திருக்கிறார். போலவே விழா ஒன்றில் சேரனுடன் தாமினியின் காதலர் சந்துரு இருக்கும் படம். கடந்த ஜூன், 13 அன்று பதிவேற்றப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கும் சேரன் ‘லைக்’ இட்டிருக்கிறார்.

இதிலிருந்து சேரன் தன்னுடைய மகளின் காதலை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் காதலுக்கு எதிரானவர் அல்ல என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சந்துரு குறித்து சமீபத்தில் அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஊடகங்களில் சேரன் சொல்வதைப் போல சந்துருவின் பின்னணி, சேரனின் முதல் மகளிடம் முறைகேடாக இணையத்தளத்தில் சாட்டிங் செய்தது போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம். எனவேதான் தன் மகளுக்கு இவர் ஏற்றவரல்ல என்கிற அடிப்படையில் காதலை எதிர்த்திருக்கலாம். ஒரு தகப்பனாக தன் கடமையை சேரன் சரியாகதான் செய்கிறார் என்று தோன்றுகிறது.

காதலை ஆதரிக்கிறோம் என்கிற பெயரில் சேரனின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை (அது இன்று சந்திக்கே வந்துவிட்டிருந்தாலும்) கொச்சைப்படுத்துவது சரியல்ல. அவர் காதலுக்கு எதிரானவர் என்று ‘பிம்பம்’ கட்டியெழுப்புவது வடிகட்டிய அயோக்கியத்தனம். சேரனோ, சந்துருவோ, தாமினியோ சாதி பற்றி எதுவுமே இதுவரை பேசாத நிலையில், இளவரசன் – திவ்யா காதலோடு இதை ஒப்புமைப்படுத்திப் பேசுவது அறிவார்ந்த செயல் அல்ல. குறிப்பாக பாமகவும், அதன் தொண்டர்களும் இவ்விவகாரத்தில் மைலேஜ் தேடுவது பச்சை சந்தர்ப்பவாதமே தவிர வேறெதுவுமில்லை.

பதினெட்டு வயது பெண்ணுக்கு தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கிறதா என்றால் சட்டப்படி இருக்கிறது. ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் துணை சரியான துணையில்லை என்று ஆதாரப்பூர்வமாக பெற்றோர் கருதும் நிலையில், அப்பெண்ணின் காதல் கண்ணை மறைக்கிறது எனும்போது சட்டம் வெறும் சட்டமாக மட்டும் செயல்படக்கூடாது. அப்பெண்ணுக்கு தகுந்த நிபுணர்களின் கவுன்சலிங் தேவை. நீதிமன்ற கண்காணிப்பில் அப்பெண்ணிடம் பெற்றோர் தங்கள் தரப்பை பேசுவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும். சேரன், சந்துரு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது காவலர்களால் விசாரித்து உண்மை வெளிவரவேண்டும். ஒரு பெண்ணை ஏமாற்றும் நோக்கில் சந்துரு காதலித்திருந்தால் அவர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை சேரன் பொய் சொல்லியிருந்தால் சந்துருவுக்கு ஆதரவாக சட்டம் செயல்படவேண்டும். வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் தாமினியின் உரிமையை அதே சட்டம் உறுதி செய்யவேண்டும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template