85 வயதான பாட்டி செங்கற்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 85). இவரது கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது தனிமையில் வசித்து வரும் சரஸ்வதி பாட்டி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவரது சாப்பாடே செங்கல் மட்டும் தான், இதனால் இவரை செங்கல் பாட்டி என்றே அழைக்கின்றனர்.
தினமும் 1 முதல் 3 வரையிலான செங்கல்லை சாப்பிடுகிறார். சிறுவயதில் செங்கலை சுவைக்க தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட தொடங்கி, தற்போது கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட தொடங்கி விடுகிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோரும், திருமணத்திற்கு பிறகு எனது கணவரும் என்னை திட்டினர்.
பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்
85 வயது வரை செங்கற்களை உண்டு உயிர் வாழும் விசித்திர பாட்டி!
Written By TamilDiscovery on Thursday, June 27, 2013 | 3:53 AM
Related articles
- திருமணம் முடிந்த கையோடு உயிரை விட்ட பெண்: நெஞ்சை நெகிழவைத்த காதல்!
- உடனடியாக மரணத்தை தழுவ முட்டாள் தனமானா 10 வளிகள்!
- 2012 இன் உலகின் சிறந்த கட்டிடமாக மர்லின் மன்றோ தெரிவு!
- முதுமை எவ்வாறு ஏற்ப்படுகின்றது? கவனியுங்கள்!
- உலகில் உயிர்வாழும் வயதான நபருக்கான உரிமையைக் கோரும் எதியோப்பிய விவசாயி!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
Labels:
Amazing
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !