யாழ். மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை மரணப் பதிவேட்டு குறிப்பறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
யாழில் கடந்த 2012ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாக அந்த மரணப் பதிவேடு குறிப்பறிக்கை குறிப்பிட்டுள்ளது. யாழில் தற்கொலை அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை, மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறை, கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி மற்றும் கள்ளக்காதல் விவகாரம், இளவயதுத் திருமணங்கள், விவாகரத்து, திருமணத்திற்கு முன்னரான குழந்தை பிறப்பு இவை தற்கொலைக்கான அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மரணப்பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்கொலை வீதத்தைத் தடுப்பதற்கு கிராமிய மட்டத்திலிருந்து விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். பாடசாலை மட்டத்திலிருப்பவர்களுக்கு தற்கொலை பற்றிய விழிப்புணர்வு மற்றும் தற்துணிவு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து எதிர்வரும் காலங்களின் தற்கொலை வீதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் உளவள நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !