பாகிஸ்தானில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நடிகை மீது காதலன் அசிட் வீசியுள்ளார். இதில் அவரது முகம், கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவது,
பாகிஸ்தானில் பிரபல நடிகை புஷ்ரா வயது 18. சினிமா, டிவி சீரியல்கள், நாடகங்களில் நடித்து வருபவர். பெஷாவரில் உள்ள நவ்ஷெரா பகுதியில் இவரது வீடு அமைந்துள்ளது. வீட்டின் படுக்கை அறையில் நேற்று புஷ்ரா உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.
அதிகாலை இவரது வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர், புஷ்ரா பெட்ரூமில் நுழைந்து, அவர் மீது அசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதன்போது அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது பெற்றோர், சகோதரர் திடுக்கிட்டு எழுந்தனர். புஷ்ராவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடிகைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புஷ்ராவின் சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதில் தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் ஷாகத் கான், புஷ்ராவை காதலித்தார். திருமணம் செய்ய வற்புறுத்தினார். ஆனால் புஷ்ரா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரத்தில் அசிட் வீசியுள்ளார் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பிரபல பாடகி கஜாலா ஜாவீத் முன்னாள் கணவருடன் ஏற்பட்ட தகராறில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் பிரபலங்கள் மீது எசிட் வீச்சு, சுட்டு கொலை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
உறங்கிக்கொண்டிருந்த நடிகை மீது காதலன் அசிட் வீச்சு!!!
Written By TamilDiscovery on Sunday, June 23, 2013 | 12:03 PM
Related articles
- இந்தியப் பிரதமர் மன்மோகனிடம் தோற்ற அமெரிக்க.
- 2015 முதல் விற்பனைக்கு வரும் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து.
- முஸ்லிம் அல்லாதோர் அல்லா என்ற சொல்லை பயன்படுத்தத் தடை!
- பொருளாதாரம் முடங்கும் நிலை: ஒபாமா எச்சரிக்கை!
- கதிர்வீச்சு கலந்த நீர் சமுத்திரத்தை சென்றடைந்திருக்கலாம் - டோக்கியோ மின்சக்தி நிறுவனம்!
- வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றம்!
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !