வாஷிங்டன்: பழங்கள், காய்கறிகளை ஜூஸ் போட்டு ஆவலுடன் குடிப்பவர்களை
பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் 30 ஆண்டுகளுக்கும்
மேலாக தினசரி 2 லிட்டர் மனித ரத்தத்தை ஜூஸ் போல குடிக்கிறார்.
அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா
மாகாணத்தில்தான் நடைபெற்றுவருகிறது.
ரத்தம் குடிக்கும்
இந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனவாம். ரத்தப்
பிரியையான அந்தப் பெண்ணின் பெயர் ஜூலியா கேப்லஸ் (45). இவரது கணவர்
டொனால்டு லாசரோவிச். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசித்து
வரும் இவர்களுக்கு 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அரில் (24)
என்ற மகளும், அலெக்ஸ் என்ற மகனும் உள்ளார்.
காதல் முத்தம்:
இளம்
வயதில் ஜூலியா காதலித்த போது தன் காதலனுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது உதட்டை கடித்துவிட்டார். காதலன் உதட்டில்
இருந்து வந்த ரத்தத்தை அவர் உறிஞ்சி குடித்துள்ளார். ரத்தத்தின் சுவை
அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
30 ஆண்டுகால ருசி:
காதலனின்
ரத்தம் குடித்து ருசித்த அவர் தொடர்ந்து ரத்தம் குடிக்க ஆரம்பித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக ஜூலியா ரத்தம் குடித்து வருகிறார். தினமும் 2 லிட்டர்
ரத்தம் வரை அவர் ருசித்து விடுகிறாராம்.
ரத்த தானம் தரும் நல்லவர்கள்:
ஜூலியாவுக்கு
ரத்தம் கொடுக்க ஏராளமான கொடையாளர்கள் தயாராக உள்ளனர். ரத்தம் கொடுக்க
விரும்பும் நபர்களின் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் கத்தியால் கீறி அதில்
வெளிவரும் ரத்தத்தை உறிஞ்சி குடித்து விடுகிறார்.
எப்படி நிறுத்துவது:
ஜூலியாவின்
கணவர், பிள்ளைகள் எவ்வளவோ முயன்றும்கூட அவரது ரத்தம் குடிக்கும் பழக்கத்தை
நிறுத்த முடியவில்லை. ரத்த தானம் செய்பவர்கள் கிடைக்காத நேரத்தில் ரத்த
வங்கிக்கு சென்று பணம் கொடுத்து ரத்தம் வாங்கி குடிக்கிறார்.
நிறைய சத்து இருக்கே:
மனித
ரத்தத்தில் ஏராளமான சத்துக்கள் இருப்பது எனக்கு தெரியும். தினமும் ரத்தம்
குடிப்பதால் நான் மிகவும் வலிமையாக, ஆரோக்கியமாக உள்ளேன். இதனால் நோய்
தாக்குதலுக்கு உட்படாமல் அழகாக இருக்கிறேன்' என்கிறார் ஜூலியா.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ருசி பிடிச்சிருக்கு போல.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !