நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி கற்குளி வீதியில் உள்ள வீடொன்றில் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டுக்காரரின் கழுத்தில் கத்தியை வைத்து, மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளனர். வேலியை வெட்டிக்கொண்டு வளவுக்குள் புகுந்த கொள்ளையர் வீட்டுக்காரரை எழுப்பி கத்திமுனையில் ஓரிடத்தில் இருக்க வைத்து வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த 10 ஆயிரம் ரூபா பணத்தையும் கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் அபகரித்துச் சென்றுள்ளனர். கொள்ளையிட வந்தவர்களில் ஐந்து பேர் சிங்களத்தில் பேசியுள்ளார். அதனை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து வீட்டார் அனைவரும் வீட்டில் முடங்கியிருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ். சாவகச்சேரியில் ஓடு பிரித்து திருடிவிட்டு, உணவருந்திச் சென்ற திருடர்கள்!
ஆட்கள் இல்லாத வேளையில் ஓடு பிரித்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் திருடியது மட்டுமல்லாமல், உணவருந்தி விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று நுணாவில் மேற்கில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி நுணாவில் பருத்தித்துறை வீதியிலுள்ள ஒரு வீட்டில் கடந்த திங்கள் இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் செம்பியன்பற்றிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதைச் சாதகமாக பயன்படுத்திய திருடர் கூட்டம், வீட்டு ஓடுகளைக் கழற்றி உள்நுழைந்து வீட்டிலிருந்து பெறுமதியான உடுபுடவைகள் மற்றும் மின் உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.
திருட வந்தவர்கள் வீட்டினுள் சமயலறையில் தேனீர் தயாரித்து அருந்தியது மட்டுமல்லாமல் பாண், கறி என்பன கொண்டுவந்து களைப்பை போக்கி உணவருந்திச் சென்றுள்ளனர்.
காலையில் வீட்டு உரிமையாளர்கள் வந்து பார்த்ததால் சாப்பிட்ட தேனீர் அருந்திய தடயங்கள் எல்லாம் அங்கே கிடக்கின்றன எந்த ஒரு பொருளுக்கும் சேதம் இல்லாமல் இலாவகமாக இத் திருட்டை செய்துள்ளனர் என கவலை தோய்ந்த தொனியில் தெரிவித்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !