Headlines News :
Home » » இன்றும் விடை காணமுடியாத சர்ச்சையாக இருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் நிலவுப்பயணம் உண்மையில் என்ன?

இன்றும் விடை காணமுடியாத சர்ச்சையாக இருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் நிலவுப்பயணம் உண்மையில் என்ன?

Written By TamilDiscovery on Tuesday, June 18, 2013 | 4:36 AM

அமெரிக்கா சொன்ன நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் கால் வைத்தார் என்று சொன்ன பொய் கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 - ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதேப்போல், நிலாவிற்கு விண்கலம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்கலப்பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 1957 - ஆம் ஆண்டு விண்கலத்தில் "லைகா" என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர்.

"லைகா" நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது .இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது. அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர். அந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும் போட்டிப்போட்டது. நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், "அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்" என்று அமெரிக்கா சவால் விட்டது.

அதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 - ஆம் தேதி நிலவில் இறங்கிய விண்கலத்திலிருந்து, நீல் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு "நிலவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் "நிலவில் இறங்கி நீல் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த" புகைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.

அவர்கள் சொன்னது என்னவென்றால், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் புகைப்படம் என்பதும் தான்.

"ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்" என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய "science fiction" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக்கொடியை நிலவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

சுற்றிலும் focusலைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?

அன்றைக்கு - அதுவும் 60 - களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.















Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template