இன்றைய அவசர உலகில் உடலுக்கு நிறைய பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அனைவரும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை தவிர, மற்ற உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் அந்த பிரச்சனைகளை தவிர்க்க பலரும் டயட்டை பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகமாக உள்ளது என்று டயட்டை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு டயட்டை மேற்கொண்டால் மட்டும் போதாது, டயட்டில் என்ன உணவுகளை சேர்க்கிறோம் என்பது தான் முக்கியம். அவ்வாறு தினமும் மேற்கொள்ளும் டயட்டில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சேர்க்க வேண்டுமென்று ஒருசில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அத்தகைய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவற்றை தினமும் உணவில் சேர்த்தால், அவை வயிற்றை நிறைத்து, உடலை சிக்கென்றும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.
பசலைக் கீரை:
கீரையில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால், தினமும் தவறாமல் சாப்பிடுவது நல்லது. அதிலும் பசலைக் கீரையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே மதிய வேளையில் இநத் கீரையை வேக வைத்து, கடைந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
பெர்ரிப் பழங்கள்:
பெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அவை உடலில் புற்றுநோய் செல்கள் வராமல் தடுப்பதோடு, மற்ற கொடிய நோய்கள் வராமலும் தடுக்கும். மேலும் இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதால், சருமமும் பொலிவோடு இருக்கும்.
எலுமிச்சை:
தினமும் குறைந்தது ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி விடுவதோடு, உடல் எடையும் குறையும்.
பூண்டு:
பூண்டு இதய நோயாளிகளுக்கு மட்டும் நல்லதல்ல, இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான சல்பர், சருமத்திற்கும் மிகவும் நல்லது.
ஆலிவ்:
ஆயில் சமையலில் மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த எண்ணெய் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
சிட்ரஸ் பழங்கள்:
உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் பழங்களில் சிட்ரஸ் பழங்கள் மிகவும் சிறப்பானவை. ஆகவே டயட்டில் இருக்கும் போது, சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பப்பளிமாஸ், எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆப்பிள்:
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நன்கு சிக்கென்றும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
தயிர் பால் பொருட்களில்:
ஒன்றான தயிரில் கால்சியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. ஆகவே டயட்டில் சேர்த்துக் கொண்டால், எலும்புகள் நன்கு வலுவோடும், உடல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
ஓட்ஸ்:
ஓட்ஸில் பீட்டா-குளுக்கான் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. மேலும் ஓட்ஸ் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும். மேலும் டயட்டில் இருப்பவர்கள், இதனை தினமும் சேர்த்து வந்தால், செரிமானப் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
பருப்புகள்:
இந்த சூப்பர் உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருளும், கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், இதனை தினமும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வும் கிடைக்கும்.
Home »
Health and Tips of medicine
» ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன்கள் குறையாமல் தினமும் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய உணவுகள்!
ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன்கள் குறையாமல் தினமும் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய உணவுகள்!
Written By TamilDiscovery on Tuesday, June 18, 2013 | 4:11 AM
Labels:
Health and Tips of medicine
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !