கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். இன்று (17) காலை 9.30 மணியளவில் இவர் பல்கலைக்கழக கட்டடம் ஒன்றின் ஐந்தாம் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு மாடியிலிருந்து குதித்துள்ளார். இவர் இவ்வாண்டு மே மாதத்திலேயே பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மாணவி கீழே குதித்தமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !