நியூயார்க்: வாய் பேச இயலாத சூழ்நிலையிலும் கண் ஜாடை மூலம் தன்னைச் சுட்டவனை அடையாளம் காட்டியுள்ளார் அமெரிக்கர் ஒருவர்.
அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி பகுதியை சேர்ந்த டேவிட் காண்ட்லர், 2010-ம் ஆண்டில் ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்த போது, ரிகார்டோ என்ற இளைஞனால் சுடப்பட்டார். குண்டு தலை மற்றும் கழுத்தில் பாய்ந்ததால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் டேவிட். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார் டேவிட்.
உயிரிழப்பதற்கு முன், அவரிடம் வாக்குமூலம் பெற போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், பேச முடியாத நிலையில் டேவிட் இருந்ததால், அம்முயற்சி சாத்தியப்படவில்லை. ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் ரிகார்டோ கைது செய்யப்பட்டான். அவன் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்காக அவனது போட்டோவை டேவிட்டிடம் காட்டினார்கள். அவரும், ரிகார்டோ தான் குற்றவாளி என்பதைப் போல் மூன்று முறை கண்ணை மூடித் திறந்தார். இதனை வீடியோ மூலம் பதிவு செய்தனர் போலீசார். வழக்கு விசாரணை சின்சினாட்டி கோர்ட்டில் நடை பெற்றது. அப்போது, டேவிட்டின் கண் சிமிட்டும் சாட்சியம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரிகார்டோ தான் குற்றவாளி என உறுதி செய்து, அவனுக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கொலைக்கான காரணம் போதை மருந்து கடத்தல் விவகாரம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !