இளவரசன் உடல் அரச மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தபடியே இருக்கிறது.
மருத்துவமனைக்கு வருவோரிடம் பொலிசார் திடீரென கெடுபிடி காட்டியதால் பிரச்சினை ஏற்பட்டது. தமது தரப்பு வழக்கறிஞர்களை மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்காததால் தர்மபுரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளவரசன் பெற்றோர் இளங்கோவன் - கிருஷ்ணவேனி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளவரசன் ரயிலில் அடிபட்டதை இருவர் நேரில் பார்த்ததாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசன் ரயிலில் அடிபட்டதை இருவர் நேரில் பார்த்ததாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பொலிஸார் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எனினும் அந்த இரண்டு பேரும் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.இளவரசன் ரயிலில் அடிபட்டதை தாங்கள் நேரில் பார்த்ததாக அந்த இரண்டு பேரும் டேங்க் ஆபரேட்டரிடம் கூறினராம். இதையடுத்து அவர் தலையாரியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமனுக்குத் தகவல் போனதாம். ஜெயராமன், தனக்குக் கிடைத்த தகவலை அதியமான்கோட்டை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொலிஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினராம். அப்போது இறந்தது யார் என்பது முதலில் பொலிஸாருக்குத் தெரியவில்லை.
அவருடைய பையைப் பார்த்தபோது அதில் இருந்த கடிதங்களில் திவ்யாவின் பெயர் இருந்ததால், இறந்தது இளவரசன் என்று சந்தேகமடைந்தனர் பொலிஸார். இதையடுத்து இளவரசன் ஊரைச் சேர்ந்த ஒரு பொலிஸ்காரரை அழைத்து வந்து அடையாளம் காட்டச் சொன்னபோதுதான் இறந்து கிடந்தது இளவரசன் என்று தெரியவந்ததாம்.
பின்னர் இளவரசனின் தந்தையை அந்த பொலிஸ்காரர்தான் தகவல் கொடுத்து வரவழைத்து உறுதிப்படுத்தினாராம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !