டெல்லியில் மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16–ம் திகதி ஓடும் பஸ்சில் 5 வாலிபர்களால் ஒரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது மாணவி கடுமையாக தாக்கப்பட்டதால் படுகாயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 13 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 29–ம் திகதி உயிரிழந்தார். மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட 5 வாலிபர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவனுக்கு 17 வயதே ஆனதால், அவன் மட்டும் டெல்லியில் உள்ள சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான். அவனிடம் சிறுவர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
மற்ற நான்கு வாலிபர்களும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளி ராம்சிங் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டான்.
ஏனைய மூன்று பேர் மீதும் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் மைனர் சிறுவனிடம் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்டு வந்த விசாரணை சமீபத்தில் முடிந்தது. தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மாணவி பலாத்கார வழக்கில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது தான். இந்த தீர்ப்பை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். மாணவியின் பெற்றோர் அந்த சிறுவனை தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி மைனர் சிறுவனை குற்றவாளி என்று அறிவித்தார்.
அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவரம் எதிர்வரும் 25–ம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !