
நேபாளத்தை சேர்ந்தவர் மகேஷ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி இரவு, ஞானபாரதியில் உள்ள வனப்பகுதியில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிர்மல் என்பவருடன் காரில் இருந்து பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் நிர்மலை சரமாரியாக தாக்கிவிட்டு சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர். இதுதொடர்பாக ஞானபாரதி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடினர். சம்பவம் நடத்த ஒரு வாரத்திற்குள் ராமநகர் மாவட்டம் கைலஞ்ச ஊப்ளி, மெட்டாரிதொட்டி கிராமத்தை சேர்ந்த மல்லேஷ்(வயது 20), மத்தூரா(20), சிவண்ணா(20), எலியய்யா என்ற குமார்(23) ஈரய்யா(20), மைசூர் மாவட்டம் உன்சூர் அருகே மாஸ்துவநாடி கிராமத்தை சேர்ந்த தொட்டகிரய்யா(19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 பேரும் மரம் வெட்டும் தொழிலாளிகள். அதோடு 17 வயதான இளம் குற்றவாளியையும் போலீசார் கைது செய்திருந்தனர சட்ட கல்லூரி மாணவி மீதான பலாத்கார வழக்கு பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ள 5-வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சங்கண்ணாநவர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணை முடிந்தது. அப்போது குற்றவாளிகள் 6 பேருக்கும் செப்டம்பர் 6ம் தேதி தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
இந்த நிலையில், நீதிபதி சங்கண்ணாநவர், குற்றவாளிகளான ராமு என்ற மல்லேஷ், மத்தூரா, ஈரய்யா, தொட்டகிரய்யா, சிவண்ணா, எலியய்யா ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதை கேட்ட குற்றவாளிகள், அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தார்கள். அதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் 6 பேரையும் பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹார சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
சட்டக்கல்லூரி மாணவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கற்பழிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 11 மாதத்தில் வழக்கு விசாரணை வேகமாக நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் மற்றொரு குற்றவாளி ராஜா என்பவர் தலைமறைவாக இருக்கிறார். இளம் குற்றவாளி தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !