நம்பிக்கையே வாழ்க்கை, சாத்திரத்தில் நம்பிக்கை கொண்ட நீங்கள் எண்ணியதுபோல் காரியங்கள் இடம்பெற கிரக வழிபாடுகளை நிறைவேற்றுங்கள்.
உங்கள் இராசிக்கேற்ப உள்ள பலன்களின் மீது நம்பிக்கை வைத்து செயற்ப்படுங்கள் வெற்றி நிச்சயம்.
மேஷம்:
எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பண வரவு அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் தீரும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
பெண்களுக்கு: குடும்பத்தார் சந்தோஷமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடியே நடக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.
வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளின் கெடுபிடி குறையும். பணி நிமித்தமாக வெளியூர் சென்று வரக்கூடும். அலுவலக சூழலில் மாற்றம் ஏற்படலாம். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்ளவும்.
ரிஷபம்:
உங்கள் காரியங்களை எப்பாடுபட்டாவது நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். திறமை மேம்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
பெண்களுக்கு: சேமிப்பில் கவனம் செல்லும். சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். சிலர் வேறு வீட்டுக்கு மாறக்கூடும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.
மிதுனம்:
தடைபட்ட காரியம் ஒன்று நல்லபடியாக நடக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலனில் கவனம் செலுத்தவும். பண வரவு தாமதமாகலாம்.
பெண்களுக்கு: குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவர் மீது பாச மழை பொழிவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். வேலை பளு அதிகரிக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
கடகம்:
சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும். மனம் மகிழும் செய்தியைக் கேட்பீர்கள்.
பெண்களுக்கு: பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி குறித்து முடிவு செய்யப்படும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும்.
வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை புரிந்து கொண்டு பதட்டமில்லாமல் செய்யவும். பிறர் மெச்சும்படி நடப்பீர்கள். அடுத்தவர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம்.
சிம்மம்:
கனவுகள் நனவாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் காரியங்களை செய்து முடிக்க அதிக முயற்சி தேவை. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பெரியவர்களை கலந்தாலோசிக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
பெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று நல்லபெயர் எடுக்கவும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கவும். உயர் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வருமானத்திற்கு குறைவிருக்காது. சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள்.
கன்னி:
தக்க நபர்களின் உதவியோடு உங்கள் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். பேச்சில் இனிமை தேவை.
பெண்களுக்கு: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்தி மகிழக்கூடும். கணவர் ஆதரவாக இருப்பார். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்க கால தாமதமாகலாம். உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
துலாம்:
சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவார்கள்.
பெண்களுக்கு: உறவினர்கள் பாசமாக இருப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
வேலை பார்ப்போருக்கு: எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கலாம். சிலருக்கு ஊதிய உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.
விருச்சிகம்:
கடிதம் மூலம் நல்ல தகவல் வந்து மகிழக்கூடும். உறவினர்கள் பாராமுகமாக இருப்பார்கள். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் நலம் பாதிக்கப்படக்கூடும்.
பெண்களுக்கு: தேவையில்லாமல் மனதை போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கடன் தொல்லை ஏற்படலாம். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பெரியவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். அதனால் கால, நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். யாருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
தனுசு:
எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வது நல்லது. உடன் பிறப்புகளுடன் பிரச்சனை ஏற்படலாம். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பணப் பிரச்சனை தீரும்.
பெண்களுக்கு: கணவரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும். குடும்ப செலவு அதிகரிக்கலாம்.
வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சக ஊழியர்களை நம்ப வேண்டாம். சிலர் விருப்ப ஓய்வு பெற்று செல்லக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது.
மகரம்:
அரசு காரியங்களில் பொறுமையாக இருக்கவும். பண வரவு அதிகரிக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் முன்னேற்றகரமான பலன் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளவும்.
பெண்களுக்கு: கடன் தொல்லைகள் இருக்காது. சுப நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவர் பாசமாக இருப்பது ஆறுதலாக இருக்கும்.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். வருமானத்திற்கு குறைவிருக்காது. சிலருக்கு எதிர்பார்த்தபடி இடமாற்றம் கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு அதிகரிக்கும்.
கும்பம்:
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கடின உழைப்பில் நம்பிக்கை வைக்கவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்தவும்.
பெண்களுக்கு: உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவர் பாசமாக இருப்பார். எதிலும் பொறுமையாக இருந்து பெருமை தேடிக்கொள்ளவும். கடன் பாக்கிகளை அடைக்க பார்ப்பீர்கள்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பிறகு செய்யலாம் என்று நினைத்த வேலை ஒன்றை உடனே செய்ய வேண்டி இருக்கும். சக ஊழியர்களைப் பற்றி யாரிடமும் குறை கூற வேண்டாம். வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்கவும்.
மீனம்:
மலை போல் ஏற்பட்ட பிரச்சனை ஒன்று பனிபோல் தீரும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். முகத்தில் புதுப் பொலிவு ஏற்படும். உங்களின் திறமை பளிச்சிடும். எதிரிகளை அடையாளம் கண்டு தள்ளியே இருப்பீர்கள்.
பெண்களுக்கு: கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். பெற்றோரின் உடல் நலனில் கவனம் செல்லும். வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் நட்புடன் பழகுவார்கள். பிரச்சனை ஏற்படுத்தி வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேற காலதாமதமாகலாம். எந்த வேலையையும் பிறகு செய்யலாம் என்று நினைக்க வேண்டாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !