Headlines News :
Home » » நித்தி-ரஞ்சி ‘அந்தரங்கக் காட்சிகள்’ மார்ஃபிங், போலியானவை: விஜய் டிவிக்கு மன்னிப்பு கேட்க உத்தரவு!

நித்தி-ரஞ்சி ‘அந்தரங்கக் காட்சிகள்’ மார்ஃபிங், போலியானவை: விஜய் டிவிக்கு மன்னிப்பு கேட்க உத்தரவு!

Written By TamilDiscovery on Friday, September 6, 2013 | 11:34 PM

நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல்.

குற்றம்...நடந்தது என்ன?
கடந்தாண்டு மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன - குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.

மார்ஃபிங் காட்சிகள்:
இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட விஜய் டிவி நிறுவனம் மீது நடிகை ரஞ்சிதா ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தோடு, சம்பந்தப்பட்ட காட்சிகள் உண்மையானவை அல்ல, மார்ஃபிங் செய்யப்பட்டவை எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

புகார்:
இது குறித்து டிவி தன்னாட்சி ஒழுங்கு முறை அமைப்பின் முன்பு ஆஜராகி ஒளிபரப்பு புகார்களுக்கான கவுன்சிலில் புகார் தெரிவித்திருந்தார் ரஞ்சிதா.

மன்னிப்பு கேட்க உத்தரவு:
இந்தப் புகாரை விசாரித்த நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான கவுன்சில் ஸ்டார் விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மார்ஃபிங் உறுதி:
இதுதொடர்பாக அந்த கவுன்சில் பிறப்பித்துள்ள உத்தரவில், விசாரணையில் அந்த வீடியோ காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மன்னிப்பு வாசகம் ஸ்கிரோல்:
மேலும் செப்டம்பர் 9ம் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை, மன்னிப்பு கேட்கும் வாசகத்தை ஸ்கிரோல் செய்து ஒளிபரப்ப வேண்டும்.

விதிகளை மீறிய சேனல்:
புகார்தாரரின் அடிப்படை உரிமைகளை இந்த டிவி நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும், ஒழுங்குமுறை அமைப்பின் விதிகளையும் இந்த டிவி நிறுவனம் அப்பட்டமாக மீறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template