சாம்சுங் நிறுவனத்துக்கு எதிராக அப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அப்பிள் நிறுவனம், ஐபோன்களை தயாரித்து வருகிறது. தன்னுடைய போன்களில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை, சாம்சுங் நிறுவனம் திருட்டுத் தனமாக பயன்படுத்தி வருகிறது என்று அமெரிக்கா மட்டுமின்றி, பல நாடுகளில் அப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வரும் நிலையில், வர்த்தக கமிஷனில் அப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 2 சாம்சுங் மாடல்களில் அப்பிள் போன் அப்ளிகேஷன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், மீதமுள்ள நான்கு மாடல்களில் குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகாததால், அவற்றை இறக்குமதி செய்வதில் தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !