Headlines News :
Home » » தலைவா படத்தின் 3 ஆயிரம் திருட்டு சிடிக்கள் பறிமுதல்!

தலைவா படத்தின் 3 ஆயிரம் திருட்டு சிடிக்கள் பறிமுதல்!

Written By TamilDiscovery on Sunday, August 11, 2013 | 10:07 PM

தமிழகத்தில் தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்களை பொலிசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தின் அத்வைதாபுரத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான வீடியோ கடையில் விஜய் ரசிகர்கள் ஆய்வு செய்தனர். அப்‌போது, தலைவா படத்தின் திருட்டு சி.டி.க்கள் ஏராளமாக வைத்திருந்ததை கண்டுபிடித்து பொலிசில் புகார் கூறினர்.

இதனையடுத்து சேலம் மேற்கு சரக கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கமலேஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பொலிசார் கடையை சோதனை செய்தனர்.

அப்போது, 3 ஆயிரம் திருட்டு சி.டி.க்களையும், சி.டி. ரைட்டர்கள், 10 கணனிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தருமபுரி மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் முரளி(வயது 28), மரியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார்(வயது 27), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருள்பிரபு(வயது 36) ஆகியோரை பொலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் திருட்டு சிடி தயாரிப்பு கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட சேலத்தை சேர்ந்த ராஜாவை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதல்வர் தீர்ப்பார்:

தலைவா படம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘தலைவா‘ படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சிடியை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

முதல்வர், என்.எல்.சி பிரச்னை, காவிரி பிரச்னை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி என எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறார். அவரது வெளி ப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர், ‘தலைவா’ பிரச்னையிலும் தலையிட்டு விரைவில் படம் வெளிவர ஆவண செய்வார்.

அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் கூறியுள் ளார்.

அரசுக்கு எதிராக கருத்து சொல்லவில்லை: தனுஷ்.

அரசுக்கு எதிராக எந்த  கருத்தும் நான் சொல்லவில்லை என்று நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைவா படம் வெளியாவது தொடர்பாக டுவிட்டரில், அரசுக்கு எதிராக கருத்து கூறியிருந்ததாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

நான் அரசுக்கு எதிராக எந்த கருத்தும் சொல்லவில்லை’ என்று  விளக்கம் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template