இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வில்லியம்ஸ், ஹாரியின் தாயார் டயானா மூலம்தான் இந்த மரபணு அவர்களது உடலில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டயானாவின் மூதாதையரான தியோடார் போர்ப்ஸ் 1788 முதல் 1820 வரை இந்தியாவில் பணிபுரிந்த போது, அவருடைய வீட்டில் பணிபுரிந்த எலிசா கெவார்க் என்ற பெண்மணி மூலம் இந்திய வம்சாவளி மரபணு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எனவே இந்திய வம்சாவளி மரபணு உள்ள ஒருவர் முதன்முறையாக இங்கிலாந்து பிரிட்டன் மன்னராக வரவுள்ளார் என்று கூறபடுகிறது.
ஆயினும் இந்த மரபணுக்கள் தாய்வழி சொந்தங்களில் மட்டுமே பரவும் காரணத்தால், வில்லியம் மற்றும் ஹாரியின் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்படுகிறது.
இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரியின் தாயான டயானாவின் பெற்றோர் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் தெரியவந்ததாவது:
டயானாவின் அம்மா பெயர் கேதரீன். இவரது தந்தை தியோடர் போர்ப்ஸ். ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவை ஆண்டு கொண் டிருந்தபோது, சூரத்தில் இருந்த அவர்களின் கம்பெனியில் இவர் பணியாற்றியுள்ளார்.அப்போது எலிசா நெவார்க் என்ற இந்திய பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதில் அவர்களுக்கு பிறந்த மகள்தான் கேதரீன்.
பின்னாளில், எலிசாவிடம் சொல்லாமல் கொள்ளாமல், தியோடர் தனது குழந்தையுடன் இங்கிலாந்துக்கு சென்றுவிட் டார். இவ்வாறு ஆய்வில் தெரியவந்தது.
சாதாரணமாக தாயிடம் இருந்து மரபணு, அவரின் குழந்தைக்கு செல்லும். இதன்படி பார்த்தால், எலிசாவின் மரபணு, கேதரீனுக்கும், கேதரீன் மூலம் டயானாவு க்கும், டயானா மூலம் அவரது குழந்தைகள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு வந்திருக்க வேண்டும். தியோடர் பற்றி கூறப்படும் செய்திகள் உண்மை என்றால், இதுவும் உண்மையாக இருக்க வேண்டும்.
இதையடுத்து, இங்கிலாந்தில் உள்ள, மரபணு மூலம் வம்சாவழியை கண்டறியும் நிறுவனமா பிரிட்டன் டிஎன்ஏ, எலிசாவின் நேரடி வாரிசுகள் சிலரிடம் இருந்து எச்சில் மூலம் டிஎன்ஏவை பரிசோதித்தது. இதில், வில்லியம், ஹாரியின் உடலில் இருக்கும் அதே மரபணு, எலிசாவின் நேரடி வாரிசுகளிடமும் இருந்தது. இதன் மூலம் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு இருப்பது உறுதியாகியுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !