கள்ளக்காதல் தொடர்பால் சிதம்பரம் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரை, அவரது மனைவியே காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீஸாருக்கு கடலூர் மாவட்ட எஸ்.பி ராதிகா ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். சிதம்பரம் கனகசபைநகர் 7-வது கிராஸ் ரோட்டைச் சேர்ந்தவர் இ.சம்பத் (35). அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் எல்க்டிரிகல் & இன்ஸ்ட்ருமெண்டேஷன் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த ஆக.30-ம் தேதி இரவு கார் மோதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், மீனா மற்றும் தனிப்படை போலீஸார் இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். உதவிப் பேராசிரியரின் மனைவி கிரண்ரூபினியே, குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த காதலன் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் அமீர்பாஷாவுடன் இணைந்து இரும்பு கம்பியால் பின்மண்டையில் தாக்கி காரை ஏற்றிக் கொலை செய்து விபத்து போல சித்தரித்ததை கண்டுபிடித்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் செல்போனில் இருந்து தவறுதலாக உதவிப் பேராசிரியர் சம்பத் மனைவி கிரண்ரூபினிக்கு வந்துள்ளது. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தொடர்பு காதலாக மாறி கணவருக்கு தெரியாமல் காதலன் ராஜேஷை சிதம்பரம் நகருக்கு அடிக்கடி வரச்சொல்லி கிரண்ருபினி வற்புறுத்தியுள்ளார். அதன்பேரில் சிதம்பரம் அருகே பி.முட்லூர், வல்லம்படுகை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அடிக்கடி சந்தித்துள்ளனர்.
கிரண்ரூபினியில் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு கணவர் சம்பத் கண்காணித்து உண்மை தெரிந்ததும், மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் கண்டித்துள்ளார்.
இதனால் கிரண்ரூபினி காதலன் மற்றும் நண்பர் மூலம் கணவரை தாக்கியும், காரை ஏற்றியும் கொலை செய்து விபத்து போல் சித்தரித்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர். இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு தலா ரூ.ஆயிரம் ரொக்கப்பரிசினை மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டன்ட் ராதிகா வழங்கி பாராட்டினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !