கமலஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பல்வேறு சர்ச்சைகள், போராட்டங்களுக்கு மத்தியில் விஸ்வரூபம் படம் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் விஸ்வரூபம்-2 படமும் பிரச்னையில் சிக்கியுள்ளது.
கமல் நடித்து, இயக்கி ஓஸ்கர் பிலிம்சோடு இணைந்து தயாரிக்கும் படம் விஸ்வரூபம்-2. பூஜா குமார், ஆண்ட்ரியா உட்பட பலரின் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்படம் குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்–2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.
யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விஸ்வரூபம்2 திரைப்படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும், சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுக்குமாறு கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !