
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிவரை மாத்திரமே மேற்படி துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட முடியும் என வரையறுக்கப்பட்டிருந்த போதிலும் நாளை 15ஆம் திகதி வியாழக்கிழமை வரை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்திருக்கும் என துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. கடந்த 5ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட மேற்படி துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கென 8ஆம் திகதி முதல் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை வரையில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் துறைமுகத்தை பார்வையிட்டிருப்பதாக அதிகாரசபை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் புதிய துறைமுகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் உள்நுழைந்ததால் தலைநகரில் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டது.
கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, காலிமுகத்திடல் உள்ளிட்ட பிரதேசங்களிலேயே வாகன நெரிசல் அதிகரித்திருந்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !