ஜொஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தீவிரமான கோமா நிலையில் இருப்பதாலும் அவர் மீண்டும் குணமாக வாய்ப்பே இல்லை என்பதாலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை நிறுத்துமாறு டாக்டர்கள் அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் கோளாறு காரணமாக கடந்த மாதம் 8ம் தேதி ப்ரிடோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மண்டேலாவின் 3 குழந்தைகளை மீண்டும் புதைப்பது குறித்த குடும்ப பிரச்சனை தொடர்பாக கடந்த மாதம் 26ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், மண்டேலா permanent vegetative state- நிலையில் இருப்பதாகவும், அவருக்கு அளித்து வரும் செயற்கை சுவாசத்தை நீக்கிவிடுமாறும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு அறிவுரை செய்துள்ளனர்.
மண்டேலா மேலும் கஷ்டப்படுவதைவிட செயற்கை சுவாசத்தை எடுத்துவிடலாமா என்று அவரது குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்களாம். ஆனால் மண்டேலாவின் உடல் நிலை மோசமான நிலையில் இல்லை என்று தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டேலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தென்னாப்பிரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !