அகமதாபாத்: இளம் பெண் இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேரை போலி என்கவுண்டர் மூலம் கொன்ற குஜராத் போலீஸார், நால்வர் மீதும் 70க்கும் மேற்பட்ட தோட்டாக்களைப் பாய்ச்சியுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குற்றப்பத்திரிக்கையில் கூறுகையில், இந்த துப்பாக்கிச்சூட்டை என்.கேஅமீன்தான் நடத்தினார். தனது 9 மில்லிமீட்டர் பிஸ்டல் துப்பாக்கி மூலம் மொத்தம் 5 ரவுண்டு அவர் சுட்டுள்ளார். அதேபோல ஜே.ஜி. பார்மர், தனது ரிவால்வர் மூலம் 4 ரவுண்டுகளும், தருன் பரோட் மற்றும் ஐகே செளகான் ஆகியோர் முறையே 6 மற்றும் 3 ரவுண்டுகள் சுட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு வெறியாட்டத்தில் மோகன் கலஸ்வாவும் கலந்து கொண்டார். இவர் தனது ஏ.கே.47 துப்பாக்கி மூலம் 32 ரவுண்டு சுட்டுள்ளார். அதேபோல கமாண்டோ வீரர் மோகன் நஞ்சி, தனது துப்பாக்கி மூலம் 10 ரவுண்டுகளும், அஞ்சு ஜிமான் செளத்ரி 10 ரவுண்டுகளும் சுட்டனர்.
என்கவுண்டர் ஸ்பாட்டுக்கு காரில் இஷ்ரத் உள்ளிட்டோர் கொண்டு வரப்பட்டதுமே காரைப் பார்த்து அமீன், பரோட், பார்மர், கலஸ்வா மற்றும் செளத்ரி ஆகியோர் சுட ஆரம்பித்தனர். துப்பாக்கியால் சுடும்போது பரோட்டும், கலஸ்வாவும் தங்களது துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்ததையடுத்து, செளான் மற்றும் நஞ்சியிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கி மறுபடியும் சுட்டுள்ளனர் என்றுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !