பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் அசாரம் பாபு இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ஜோத்பூர் ஆசிரமத்தில் வைத்து பலாத்காரம் செய்ததாக சாமியார் அசாரம் பாபுவை ராஜஸ்தான் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உடல் நலம் சரியில்லாத தனக்கு வீட்டு சாப்பாடு வழங்க வேண்டும் என அசாரம் பாபு கோரிக்கை வைத்தார். இதை சிறை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து ஜோத்பூர் செஷன்ஸ் கோர்ட்டில் அசாரம் பாபு வக்கீல் வழக்கு தொடர்ந்தார். அவரது உடல்நிலையை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து அவர் நேற்று ஜோத்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு எம்ஆர்ஐ, இசிஜி போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் பின்னர் இரத்த பரிசோதனை அறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்த ஊழியர் அசராம் பாபுவிடம் இரத்தம் எடுக்க முயன்றபோது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதேபோல் சிறுநீர் மாதிரி கொடுக்கவும் அசாரம் பாபு மறுத்து விட்டார். பரிசோதனை செய்து கொள்ள மாட்டேன் என எழுதியும் கொடுத்தார். சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை என அசாரம் பாபு தொடர்ந்து மறுத்துவருகிறார்.
அவரது ஆதரவாளர்களும் இந்த குற்றச்சாற்றை கடுமையாக மறுத்து வருகின்றனர். குற்றச்சாற்றை மறுக்கும் அசாரம் பாபு உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உ.பி.யில் செய்தியாளர்களிடம் கூறினார்.
உண்மை கண்டறியும் சோதனை நடத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் இரத்த பரிசோதனைக்கு அசராம் பாபு மறுத்திருக்கலாம் என ஜோத்பூர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறுமியை தனிமையில் சந்தித்ததை ஒப்புக்கொண்ட அசாரம் பாபு!
ஆசாராம் பாபுவின் திடுக்கிடும் தகவல்கள்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !