இறக்குவானை மாதம்பை இல 2 தோட்டத்தில் மர்மமான முறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தவரின் பிரேதத்தை வீதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை இறக்குவானை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்து கலைத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இறக்குவானை மாதம்பை இல 2 தோட்டத்தைச் சேர்ந்த எல்.ராமச்சந்திரன் (வயது 42) என்பவர் கடந்த சனிக்கிழமை மர்மமான முறையில் நீரோடையில் கிடந்தவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்மரணம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்யவில்லையென கோரியே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கி பிரயோகத்தின் பின் ஓடிச் சென்றவர்கள் மீண்டும் பிரேதத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம்: துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலைப்பு!
Written By TamilDiscovery on Wednesday, July 3, 2013 | 12:29 AM
Related articles
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
- தூக்கில் போட்டாலும் மஹிந்தவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: மங்கள!
- விபச்சாரப் பெண்களை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !