தலைவா படத்தின் பெயர், அதன் டேக் லைன் அனைத்தும் அதிகார மையத்துக்கு அலர்ஜியாகி அதன் பிறகு நடந்த அழுகுணி ஆட்டம் அனைவரும் அறிந்ததே.
ஜில்லா படத்தில் மறந்தும் அரசில் வசனம் வராமல் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் புதிய பிரச்சனை ஒன்று ஜில்லாவை பயமுறுத்தியது.
ஜில்லா என்பது வடமொழிச் சொல். தமிழில் பெயர் வைத்தால்தான் படத்துக்கு 30 சதவீத வரிச்சலுகை கிடைக்கும் எனும் நிலையில், வடமொழிச் சொல்லான ஜில்லாவுக்கு எப்படி வரிச்சலுகை கிடைக்கும்?
இதற்கு படத்தின் இயக்குனர் நேசன் விளக்கம் தந்துள்ளார். ஊரில் கெத்தாக திரியும் இளவட்டங்களை மதுரைப் பக்கம் ஜில்லா என்று அழைப்பதுண்டு. அந்த ஜில்லாதானாம் இந்த ஜில்லா.
அதாவது இடத்தை குறிக்கும் வடமொழிச் சொல்லான ஜில்லா கிடையாதாம் இது. கெத்தான ஆளை குறிக்கும் ஜில்லா.
பார்த்து... கெத்துன்னாலே சிலருக்கு பிடிக்காமப் போகுது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !