7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று நான்கு நாட்களாக நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வாலிபனை டெல்லி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் ஒருவர், 7ம் வகுப்பில் படித்து வந்த தனது 16 வயது மகளை காணவில்லை என்று பொலிசில் புகார் அளித்தார். இதனையடுத்து, பொலிசார் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மாணவியின் வீட்டின் அருகில் வசிக்கும் சந்தன் (24) என்பவன் மீது தங்களுக்கு சந்தேகமாக இருப்பதாக பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில், அவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நண்பனின் வீட்டில் மாணவியை அடைத்து வைத்திருப்பதாக கூறினான்.
விரைந்து சென்ற பொலிசார் அந்த வீட்டில் இருந்த மாணவியை மீட்டு, சந்தன் மற்றும் அவனது நண்பன் பிரமோத் அகியோரை கைது செய்தனர். பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்த மாணவி, பிரமோத்தின் வீட்டில் 4 நாட்களாக அடைத்து வைத்த சந்தன் பலமுறை தன்னை கற்பழித்ததாகவும், விபசார தரகர்களிடம் விற்பதற்காக பேரம் பேசியதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் சிறையில் அடைத்தனர்.
16 வயது மாணவி வல்லுறவின் பின் விபசார தரகர்களிடம் விற்பதற்காக பேரம்!
Written By TamilDiscovery on Tuesday, July 2, 2013 | 11:43 PM
Related articles
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !