இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு தனது நண்பர் டோடி பயட்டுடன், பாரிசில் உள்ள ஓட்டலுக்கு சென்றிருந்தார். அவர்களை படம் பிடிக்க 'பாப்பராசி' என்றழைக்கப்படும் போட்டோகிராபர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களின் கண்ணில் படாமல் இருக்க ஹோட்டலின் மற்றொரு வழியாக டயானா, பயட் இருவரும் சொகுசு காரில் அவசரமாக புறப்பட்டு சென்றனர். டயானாவின் டிரைவர் காரை ஓட்டி சென்றார். டயானா வெளியில் செல்வதை பார்த்துவிட்ட போட்டோகிராபர்கள் அவர்களை துரத்தினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற போது ஒரு பாலத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. இதில் டயானா, பயட் ஆகியோர் இறந்தனர். இந்த விபத்து குறித்து ஸ்காட்லாந்து யார்டு பொலிசார் விசாரித்து வந்தனர். கடந்த 2008ல் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் டயானா இறப்பு குறித்து விசாரணை நடந்தது. அப்போது, டயானா தனது நண்பர் பயட்டுடன் சென்ற போது போட்டோ கிராபர்களிடம் இருந்து தப்பிக்க சாலை விதிமுறைகளை மீறி கார் வேகமாக புறப்பட்டு சென்றது. டிரைவர் போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இளவரசர் சார்ல்ஸுடனான மணவாழ்வை முறித்துக் கொண்டு, டோடி ஃபயத் என்னும் எகிப்திய வணிகப் பிரமுகருடன் காதல் கொண்டிருந்த டயானாவை இங்கிலாந்து அரசக் குடும்பமே திட்டமிட்டுக் கொன்று விட்டதாக அப்போது பேசப்பட்டது.
ஆயினும், விபத்து நிகழ்ந்த நாடான ஃபிரான்ஸின் விசாரணை அறிக்கைப் படி, ஓட்டுநர் மது அருந்தியபடி வாகனத்தை அதிவேகத்தில் செலுத்தியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் விசாரணை அறிக்கையும் பின்னர் இத் தகவலையே உறுதிப்படுத்தியது.
தற்போது இளவரசி டயானா மரணம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது என்று இங்கிலாந்து பொலிசார் தெரிவித்துள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், டயானா இறப்பு தொடர்பாக சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பொருத்தமானவைதானா, நம்பத்தகுந்த தகவலா என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் என்றனர்.
ஆனால், என்ன தகவல் கிடைத்துள்ளது என்பதை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டயானாவை கொன்றது பிரிட்டன் ராணுவம்?
டயானாவை கொலை செய்தது பிரிட்டன் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் என்று வெளியான புதிய தகவல் குறித்து லண்டனின் ஸ்கார்ட்லாந்து யார்டு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில், இங்கிலாந்து இராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியிடம் அரச குடும்பத்தாரின் உத்தரவின்படிதான் டயானாவை இங்கிலாந்து இராணுவத்தினர் கொன்று விட்டனர் என இரகசியமாக கூறி வைத்துள்ளார். இரகசியத்தை கூறிய இராணுவ வீரர் தற்போது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதால் மனைவின் பெற்றோர் இவ்விவகாரத்தை இராணுவ உயரதிகாரிகளுக்கு கசிய விட்டு, இரகசியத்தை வெளியிட்ட முன்னாள் மருமகனை ‘போட்டுக் கொடுத்து’ பழி வாங்க தற்போது முன்வந்துள்ளனர்.
டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் மேற்படி புதிய தகவல் தொடர்பாக விசாரனை நடத்த ஸ்காட்லேண்ட் யார்ட் பொலிசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இரகசியத்தை கசியவிட்ட இராணுவ வீரரின் முன்னாள் மனைவியை தொடர்பு கொண்டுள்ள பொலிசார் அடுத்தகட்ட விசாரணைக்கு தயாராகி வருகின்றனர்.
1997 ஆகஸ்ட் 31-ல் டயானா தனது நண்பர் டோடியுடன் பாரீஸில் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இத்தகவல் உண்மையானது தானா என்பது குறித்து விசாரணை நடத்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உயரதிகாரி சர் பெர்னார்ட் ஹோரன்-ஹவ் அனுமதி வழங்கியுள்ளார்.
இருந்தாலும் இப்போது நடைபெறுவது டயானா மரணம் குறித்த முழுமையான மறுவிசாரணை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஸ்னத் கானுடன், டயானா தீவிரக் காதல்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !