பாகிஸ்தானைச் சேர்ந்த வைத்தியர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் தங்கிவிட திட்டமிட்டிருந்தார் மறைந்த இளவரசி டயானா என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமீமா கான்.
இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமீமா கான், டயானா குறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார். மேலும், அப்பேட்டியில் டயானா குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹஸ்னத் கானுடன், டயானா தீவிரக் காதல் கொண்டிருந்தார். தீவிரம் என்றால் பைத்தியமாக இருந்தார். ஹஸ்னத் கானை மணந்து கொள்ளவும் அவர் தயாராகியிருந்தார். அப்போது ஹஸ்னத் கான் நீதிமன்றத்தில் சில வழக்குகளை சந்தித்து வந்தார். அதை முடித்த பின்னர் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார் டயானா.
பாகிஸ்தான் சென்று அங்கு ஹஸ்னத் கானின் குடும்பத்தினரையும் அவர் இரகசியமாக சந்தித்துப் பேசியிருந்தார். திருமணம் குறித்தே அவர்கள் பேசியதாக தெரிகிறது. நானும் பாகிஸ்தானில் திருமணம் செய்திருந்ததால், என்னுடன் தோழியாகி விட்டார் டயானா.
இம்ரான் கானின் மருத்துவமனை நல நிதிக்காக பாகிஸ்தானுக்கு 2 முறை வந்துள்ளார் டயானா. 2 முறையும் என்னை சந்தித்துப் பேசினார். இந்த இரண்டு முறையும், அவர் ஹஸ்னத் கான் குடும்பத்தினரை இரகசியமாக சந்தித்துப் பேசினார். பாகிஸ்தான் வாழ்க்கையை நீ எப்படி சமாளிக்கிறாய் என்றும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஆனால் டயானாவின் திருமண திட்டத்தை ஹஸ்னத் கான் விரும்பவில்லை. இது கேலிக்கூத்தானது என்று அவர் கூறினார்.
இங்கிலாந்தில் தன்னால் நிச்சயம் வசிக்க முடியாது. அதேசமயம், சாதாரண கணவன் மனைவியாக பாகிஸ்தானில் வேண்டுமானால் வசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
டயானாவின் ஆசை கைகூடவில்லை. அவர் சார்லஸை மணந்தார் என்று கூறியுள்ளார் ஜெமீமா கான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !