சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (31) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென். பிரான்ஸிஸ் சேவியர் என்ற கப்பல் மூலம் பயணித்துக் கொண்டிருந்த போது கிழக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினர் அதனை மடக்கிப் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 59 ஆண்கள், 26 பெண்கள் மற்றும் 31 சிறுவர்கள் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், வெலிகம பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமது நாட்டுக்குள் புகலிடம் கோரி கடல் வழியாக நுழையும் இலங்கையர்கள் எல்லையில் வைத்து விசாரணைகள் எதுவுமின்றி திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் கடந்த மாதம் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு ஒன்று இந்தோனேசிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !