ஒரு திரைப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் இசையமைப்பாளர்கள் ஒன்று சேர்வது எப்போதாவது ஒருமுறை அதிசயமாக நடக்கும்.
முன்பு இசையமைப்பாளர் எம்.எஸ்.வி-யும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றினார்கள். பரத்வாஜ் இசையில் தேவா கானா பாடல் ஒன்றை பாடினார்.
அதன்பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் எம்.எஸ்.வி-யை தனது இசையில் பாட வைத்தார். யுவன் எம்.எஸ்.வியுடன் சேர்ந்து தில்லு முல்லு (2013) திரைப்படத்தில் பணியாற்றினார். சமீபத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்கான அறிமுகப் பாடலை இம்மான் இசையமைக்க வளரும் இசையமைப்பாளரான அனிருத் பாடிக்கொடுத்தார்.
U.K.முரளி இசையமைத்த வின் என்ற திரைப்படத்தில் ஷங்கர் கணேஷும், தேவாவும் இணைந்து ஒரு பாடலை பாடினர். இவை அனைத்தையும் விட அதிகமாக பேசப்பட்டது மரியான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியது தான். இப்படி இளம் தலைமுறை இசையமைப்பாளர்கள், முந்தைய தலைமுறையினரைப் போன்று எவ்வித ஈகோவும் இல்லாமல் ஒருவர் இசையில் மற்றவர் பாடுவது அவர்களின் இரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டு வந்தாலும், ’இதையெல்லாம் அந்த காலத்துலையே செஞ்சிட்டாங்கப்பா’ என திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருந்தது.
ஆனால் இந்திய திரையுலகமே ஆச்சர்யப்படும் விதத்தில் 5 இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் பிரியாணி பட பாடலுக்காக இணைந்து பணியாற்றியுள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பிரியாணி திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஜி.வி.பிரகாஷ், இம்மான், GV Prakash, விஜய் ஆண்டனி ஆகியோர் ஒரே பாடலில் பாடியுள்ளனர்.
பிரியாணி திரைப்படம் யுவன் ஷங்கர் ராஜாவின் 100-வது திரைப்படம் என்பதால் ஒரு முத்திரையை பதிக்க இந்த ஏற்பாடு நடந்திருக்கிறதாம். இதுபற்றி டுவிட்டரில் யுவன் ஷங்கர் ராஜா “அழைத்ததும் வந்து எனக்காக பாடிக்கொடுத்துவிட்டு போன நால்வருக்கும் இதயத்திலிருந்து நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
ஒரு நாயகனின் திரைப்படத்தில் மற்றொரு நாயகன் கௌரவ வேடத்தில் நடிப்பது மாதிரி இதுவும் சில காலம் கழித்து சாதாரணமாகிவிடலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !