
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இந்த பெண் சமீபத்தில் ரமழான் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார். நாய்களை குளிப்பாட்டுவது போன்றும் அவற்றுக்கு உணவு போடுவதும் போன்ற காட்சிகளின் பின்னணியில் தொழுகைக்கான பாங்கோசை ஒலிக்க ரமழான் வாழ்த்துகள் என்ற வாழ்த்து அட்டையுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.
மதத்தின் அடிப்படை நம்பிக்கைக்கு ஊறு விளைவித்ததாக அந்த பெண்ணை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
60 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் மலேசியாவை சேர்ந்த மஸ்னா யூசப் இதுதொடர்பாக கருத்து கூறுகையில், 'நான் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அந்த வீடியோவை வெளியிடவில்லை. நான் என் மதத்தை நேசிக்கிறேன். தூய்மையின் முக்கியத்துவத்தை என் மதம் எனக்கு போதித்துள்ளது. நாய்களை வளர்ப்பதையோ, பராமரிப்பதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை' என்றார்.
பல்வேறு மத நம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் மலேசியாவில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதில் காலத்துக்கேற்ப பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும், இதுபோன்ற சிற்சில வரம்பு மீறல்கள் நிகழும்போது பழமைவாதிகள் கூச்சலிட தொடங்கிவிடுகின்றனர்.
இஸ்லாமிய மத வழக்கங்களின்படி, நாய்கள் அசுத்தமான பிராணிகளாக கருதப்படுகிறது. அவற்றை தொடுவது அசுத்தம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட மஸ்னா யூசப்புக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !