Headlines News :
Home » » திருமணமான 26 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!

திருமணமான 26 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!

Written By TamilDiscovery on Monday, July 1, 2013 | 11:20 PM

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயகடுபொத பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று  இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் திருமணமான 26 வயது இளைஞன் ஒருவர் என தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர் தனது வீட்டின் பின் புறத்திலுள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template