தமிழ்நாட்டில் சாதி பெயரை கூறி திட்டியதால் பொலிஸ் ஒருவர் வேலையை இழக்க துணிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் காவரலாக பணிபுரிபவர் ரமேஷ். இவர், திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் பாபு, தன்னை சாதி பெயரை கூறி திட்டியதாலும், அபாண்டமான குற்றசாட்டுகளை கூறுவதாலும் காவலர் பணியே வேண்டாம் என்று கூறி தன் காவல் சீருடைகளை விழுப்புரம் எஸ்.பி.யிடம் ஒப்படைக்க சென்றுள்ளார்.
இது குறித்து ஊடகவியாலரை சந்தித்த ரமேஷ் கூறுகையில், நான் திருநாவலூர் காவல் நிலையத்தில் காவலராக சேர்ந்ததிலிருந்து ஆய்வாளர் ரமேஷ் பாபு என் மீது வெறுப்புணர்வுடன் இருந்தார்.
என் சாதி பெயரை செல்லி அடிக்கடி திட்டிக் கொண்டிருந்தார். "ஏன் இப்படி திட்டுகிறீர்கள்? என்று கேட்டால், "உன் சாதியை சேர்ந்த நாலு பேரை இந்த காவல் நிலையத்தில் இருந்து மாற்றியுள்ளேன். உன்னையும் மாற்றிவிடுவேன்!" என்று கூறி மிரட்டினார். மேலும் என் மீது எந்த தவறும் அவரால் கண்டுபிடிக்க முடியாததால், என் இருசக்கர வாகனத்தில் ஒட்டியிருந்த சேகுவேரா படத்தை நீக்க சென்னார். நானும் படத்தை அழித்துவிட்டேன்.
ஆனால், இன்று காலை என் வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க சொன்னார். "இது அரசு வாகனம் இல்லை, அதனால் உங்களிடம் ஒப்படைக்க முடியாது!" என்று கூறினேன்.
இதில் கோபமடைந்து என்னை இடைநீக்கம் செய்வதாக கூறினார். அவர் என்னை இடைநீக்கம் செய்ய வேண்டியதில்லை. நானே என் காவல் சீருடைகளை எஸ்.பி.யிடம் ஒப்படைத்துவிட்டு வேலையே வேண்டாம் என்று கூற வந்துள்ளேன். இப்படிப்பட்டவரிடம் இனிமேல் என்னால் வேலை செய்ய முடியாது. அதைவிட வேலையை விட்டுவிட்டு எங்காவது போய் கூலி வேலை செய்து கூட பிழைத்துகொள்வேன்’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ரமேஷ் ஊடகவியாலரின் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று இரண்டு காவலர்கள் வந்து ரமேஷை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனால் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !