அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக 4 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை ஒருவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பஞ்சாயத்து தலைவர்களை குறி வைத்து தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர். சமீபகாலமாக பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மீது தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்த தாக்குதல்களில் பலியானோரின் குடும்பத்துக்கு மாநில அரசு இழப்பீடும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறது. இந்தநிலையில், ராபியாபாத் பகுதியில் உள்ள லய்சர் கிராமத்தை சேர்ந்த அல்தாப் அகமது என்பவர் தனது 4 வயது மகள் மஸ்கானை தூக்கிச் சென்ற தீவிரவாதிகள் அவளது கழுத்தை வெட்டிக் கொன்று விட்டதாக கடந்த 14ம் திகதி பொலிசில் புகார் அளித்தார்.
அல்தாப் அகமதின் மனைவி கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பதால் அவர்களது மகளை தீவிரவாதிகள் கொன்றிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் நினைத்தனர். ஆனால், பொலிசார் நடத்திய விசாரணையின் போது சிறுமியின் தந்தை வாக்குமூலத்தை மாற்றி, மாற்றி கூறியதால் அவரது நடத்தையில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணையை துரிதப்படுதினர். இதன்போது, மனைவியும், மகனும் வைத்தியசாலைக்கு சென்றபோது, அரசிடம் இருந்து இழப்பீட்டையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்காக, மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த உண்மையை அல்தாப் அகமது ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, அவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !