சிரியா மீது தாக்குதல் நடத்துவது உறுதி, என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
"டிவி" ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், கூறுகையில்,
"அமெரிக்கா தரப்பில் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அது ஒரு குறுகிய கால நடவடிக்கையாகவே இருக்கும். சிரியா மீதான போரும், சிறிய அளவிலேயே இருக்கும். இது தொடர்பாக, நேச நாடுகளின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. சிரியா மீது தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியாதது," என்றார்.
இதற்கிடையில், சிரியாவில் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களை, உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏனைய நாடுகளும் தம் நாட்டு மக்களை சிரியாவிலிருந்து திருப்பியளைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
நிலைமை சீரடையும் வரை, சிரியாவுக்கு யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆதரவு!
ஆதரவாக ரஷ்யா போர்க் கப்பல்கள்.
சிரியா மீது போர்.
அமெரிக்காவுக்கு சிரியா எச்சரிக்கை.
ஐ.நா. ஆய்வாளர்கள் மீது தாக்குதல்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !