சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் அமெரிக்கா, படுதோல்வியை சந்திக்கும் என அந்த நாட்டு ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்ய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது,
தங்கள் நாட்டு இராணுவத்தினர் பணியாற்றும் இடங்களில் எந்த நாடும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தாது. அமெரிக்காவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரங்கள் அற்றவையாகும். தீவிரவாதிகளை ஒடுக்குவதில் சிரியா தொடர்ந்து வெற்றியடைவதை சகித்துக்கொள்ள முடியாத சிலர் எங்கள் மீது தேவையில்லாமல் வீண்பழியை சுமத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நீண்ட காலமாகவே சிரியாவை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட ஏதாவது காரணம் கிடைக்காதா? என தேடி வருகின்றனர்.
வியட்நாம் விவகாரத்தில் தொடங்கி இன்றுவரை அமெரிக்கா ஈடுபட்ட அனைத்து போர்களிலும் அந்நாடு படுதோல்விகளையே சந்தித்து வந்துள்ளது.
சிரியா மீது போர் தொடுக்க முயற்சி செய்யும் அமெரிக்காவுக்கு எங்கள் நாட்டிலும் படுதோல்வி காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !