பாகிஸ்தானில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களுக்கு இந்து பெண்கள் தான் இலக்காகி வருகின்றனர் என அமெரிக்காவின் ஆய்வறிக்கை கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் உலகளாவிய அளவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிக்கையின் முடிவுகளின்படி பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து கடந்த 18 மாதங்களில் 16 தாக்குதல் நடைபெற்றுள்ளன.
இந்த தாக்குதல்களில் 3 இந்துக்கள் பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இதே போல், கடந்த 1 1/2 ஆண்டுகளில் மட்டும் 7 இந்து பெண்கள் பாகிஸ்தானியர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சீக்கியர்களில் ஒருவரும் மதவெறி தாக்குதலில் பலியாகியுள்ளார்.
ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையில் நடைபெற்ற 203 இன மோதல் சம்பவங்களில் 717 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 635 பேர் ஷியா பிரிவினர் என்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மதப்பிரிவான கிறிஸ்தவர்கள் மீது 37 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 11 பேர் பலியாகியுள்ளனர். 36 பேர் படுகாயமடைந்தனர். 5 கிறிஸ்தவ பெண்கள் பாகிஸ்தானியர்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !