Headlines News :
Home » » சில காட்சிகளை பறிகொடுத்து 'U' சான்றிதழ்: அறிவித்தபடி 9ம் திகதி 'தலைவா' ரிலீஸ்!

சில காட்சிகளை பறிகொடுத்து 'U' சான்றிதழ்: அறிவித்தபடி 9ம் திகதி 'தலைவா' ரிலீஸ்!

Written By TamilDiscovery on Thursday, August 1, 2013 | 4:18 AM

விஜய்யின் தலைவா படத்துக்கு சென்ஸார் போர்டின் ரிவைஷிங் கமிட்டி ‘U’ சர்டிஃபிகேட் கொடுத்திருப்பதால் சந்தோசத்தில் உள்ளார் டைரக்டர் விஜய் அன்கோ.

துப்பாக்கி படத்தின் ஹிட்டுக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் தலைவா. இந்தப்படத்தில் முதல்முறையாக் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அமலாபால். சாதாரண இளைஞன் மக்கள் தலைவனாக எப்படி உருவாகிறான் என்பதே கதை.

படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து இந்த மாதம் 9- ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவா படத்துக்கு U/A சர்டிஃபிகேட்டை கொடுத்து தலைவ பட யூனிட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது சென்ஸார் போர்ட். யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு பெறுவது கஷ்டமாகிவிடும்.

வரிச்சலுகையை நம்பி அந்தப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய வேந்தர் மூவிஸ் நிறுவனம் கூட இதனால் எரிச்சலானார்கள்.

இதனால் மீண்டும் தலைவா படத்தை சென்ஸாருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதன்படி தலைவா படத்தைப் பார்த்த சென்சார் போர்டு ரிவைஷிங் கமிட்டி மெம்பர்கள் தற்போது 'U' சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர்.

படத்தை பார்த்த கமிட்டி மெம்பர்கள் படத்தின் சில இடங்களுக்கு மட்டும் கத்தரி போடச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு தலைவா டீம் ஒப்புக்கொண்டதையடுத்து தலைவா படம் 'U' சர்ட்டிஃபிகேட்டுடன் திட்டமிட்டபடி வருகிற 9-ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. தலைவா விமர்சனம், தலைவா திரை விமர்சனம், thalaivaa thirai vimarsanam, thalaivaa vimarsanam, தலைவா சிறப்பு விமர்சனம்,

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template