பிரித்தானியாவின் கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனம் மலேரியா நோய்த் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.
இந்த மருந்து ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டது.
சோதனையின் முடிவில் நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு மலேரியாவின் தாக்கம் வெகுவாக குறைந்திருந்தது.
இதையடுத்து இம்மருந்தை விரைவில் வெளிச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்காக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திடம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் உறுதியான அறிக்கை கிடைத்தவுடன் 2015ம் ஆண்டு முதல் இந்த மருந்து விற்பனைக்கு ஒப்புதல் அளிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக கிளாஸ்கோ ஸ்மித் கீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !