ஆரம்பம் படத்தினை வெளியிடுவதற்கு சென்டிமெண்ட் ஒன்றை வைத்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.
ஆரம்பம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்ற நிலையில் படத்தை தீபாவளி தினமான நவம்பர் 2ம் திகதி வெளியிட தீர்மானித்திருந்தார்கள்.
அதன்பிறகு பட வெளியீட்டு திகதியை இரண்டு நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 31ம் திகதிக்கு மாற்றிவைத்து விட்டார்கள்.
தீபாவளி தினத்தன்று ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அடித்துப்பிடித்து சண்டையிடக் கூடாது என்பதால் முன்கூட்டியே வெளியிடுகிறார்கள் என்று நினைத்தால் இங்கு கதையே வேறு.
இதற்கு பின்னாடி ஒரு செண்டிமெண்ட்டே ஒளிந்திருக்கிறதாம்.
இதற்குமுன் ஆரம்பம் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டது, படத்திற்கு பூஜை போடப்பட்டது, படத்தின் டைட்டிலை அறிவித்தது, முதல் டீஸரை வெளியிட்டது, அடுத்து ஓடியோ வெளியீடு, ட்ரெய்லர் என எல்லாமே வெளியிடப்பட்டது வியாழக்கிழமை அன்றுதான்.
அதனால் செண்டிமெண்ட்டாக படத்தையும் வியாழக்கிழமை வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே வெளியிடுகிறார்களாம்.
சென்டிமெண்டில் வெளி வரும் ஆரம்பம்: குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வெளியீடு.
Written By TamilDiscovery on Tuesday, October 15, 2013 | 9:42 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !