
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிசெல், பாரடே மேகசின் என்ற பத்திரிகைக்கு சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்தார். அப்போது, உங்கள் வாழ்நாளில் அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியை பார்க்க வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு மிசெல் கூறுகையில், பெண் ஜனாதிபதியை அமெரிக்க நாடு ஏற்பதற்கு தயாராக உள்ளது. ஆனால், அந்த உயர்ந்த பதவிக்கு யார் தகுதியானவர்கள் என்பதுதான் கேள்வி என்றார். ஜனாதிபதி பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது போன்ற எண்ணம் இல்லை என்று மிசெல் மறுத்துவிட்டார்.
அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016ம் ஆண்டு நடைபெற உள்ளது. அப்போது முன்னாள் ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா முதல் முறையாக ஜனாதிபதி பதவி ஏற்றபோது, வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஹிலாரி கிளின்டன்.
அத்துடன் அமெரிக்க செனட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அரசியல் அனுபவம், உலக நாடுகளின் நிலை குறித்து அதிகம் தெரிந்து வைத்திருப்பவர்.
அதனால் அவரை மனதில் வைத்து மிசெல் கருத்து தெரிவித்து இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !