கொழும்பு மாநகரசபையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள், பொரளை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமொன்று சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மாநகரசபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், மயானத்துக்கு விரைந்து தீக்கிரையாக்காப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை மீட்டு வந்துள்ளனர்.
2007ஆம் ஆண்டும் முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகரசபையிலிருந்து திருடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள், அங்கிருந்து பொரளை பொது மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்று மாநகரசபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி ஒருவரே இந்த ஆவணங்கள் தீக்கிரை சம்பவத்துடன் தொடர்புடையவர் என மேற்படி மாநகரசபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !