Headlines News :
Home » » உடல் ஆரோக்கியத்தை பேண: அபூர்வ மருத்துவ குணங்கள் நிறைந்த எலுமிச்சை.

உடல் ஆரோக்கியத்தை பேண: அபூர்வ மருத்துவ குணங்கள் நிறைந்த எலுமிச்சை.

Written By TamilDiscovery on Saturday, July 6, 2013 | 12:35 PM

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான்.

ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது. இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சரியான குடலியக்கத்திற்கு:
தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

தொண்டை புண்ணை சரிசெய்ய:
எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

இளமையை தக்க வைக்க:
எலுமிச்சை அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க:
எலுமிச்சையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
எலுமிச்சையில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்தவிதமான நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

கொழுப்பை குறைக்க:
எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

குமட்டலை போக்க:
சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.

வாத நோயை சரிசெய்ய... எலுமிச்சையில் நீர்ப்பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது.

புற்றுநோயை தடுக்க:
அனைவருக்குமே எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதேப் போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

தலைவலியை போக்க:
உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.

நாடாப்புழுக்களை அழிக்க:
குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக்கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.

உணவை செரிப்பதற்கு:
அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகிவிடும்.

உடலை சுத்தப்படுத்த:
தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

பற்களை ஆரோக்கியமாக வைக்க:
எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

காயங்களை குணப்படுத்த:
உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.

முகப்பருவை போக்க:
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.

கல்லீரல் பிரச்சனைக்கு:
எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பிறப்புறுப்பை சுத்தமாக்க:
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதா? அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொருளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருக்கும்.

கண் பிரச்சனையை போக்க:
எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உணவில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்யலாம்.

சிறுநீரகக் கற்களை கரைக்க:
எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜூஸை அவ்வப்போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்துவிடும்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template