தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர் இலங்கை அகதிகள் முகாமில் வித்தியா என்ற இளம்பெண் தீ்க்குளித்து இறந்துள்ளார்.
காரையூர் அகதிகள் முகாமினைச் சேர்நத முத்துகிருஷ்ணன் என்பவரின் மகளான 23 வயதான வித்தியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மானகிரியைச் பாண்டிக்கண்ணன் என்பவரைத் திருமணம் செய்த வித்தியா சென்னையில் குடியிருந்தார். இருவருக்கும் அடிக்கடி பணப் பிரச்சனை தொடர்பாக தகராறு இருந்து வந்ததுள்ளது. இந்த நிலையில் சென்னையிலிருந்து அகதிகள் முகாமில் உள்ள வித்தியா தந்தையின் தொலைபேசிக்கு மகள் கொடுமைப்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, தனது பெண்ணை முகாமிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த மாதம் 19ம்திகதி அன்று வித்தியா தன் கைப்பட தந்தைக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய மரணத்திற்கு தனது மாமியார் ரேவதி, அவரது அக்கா நாச்சியாயி, ஆகியோர் காரணம் என்றும் தன் கணவர் தன்னை நிராகரித்து விட்டதால் தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தன்னுடைய ஒன்றரை வயது பெண் குழந்தையை அம்மா, அப்பா ஆகியோரே வளர்க்க வேண்டும் என்றும் தன்னுடைய மரணத்திற்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தை எழுதி வைத்து விட்டு வித்தியா தீக்குளித்துள்ளார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 18 நாட்கள் உயிருக்காகப் போராடியவர் வியாழக்கிழமை இரவு இறந்து விட்டார். எனவே வெள்ளிக்கிழமை முகாமில் கூடிய மக்கள் அப்பெண்ணின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த திருப்பத்தூர் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் மதுரைச்சாமி பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து இறந்த பெண்ணின் கணவரும் மாமியாரும் கைது செய்யப்படுவர் என்றும் மேலும் கோட்டாட்சியரின் விசாரணையும் நடைபெறும் என்று கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இந்த திடீர் சம்பவத்தால் திருப்பத்தூர் திண்டுக்கல் வீதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Home »
India
» இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் தீ்க்குளித்து தற்கொலை: 18 நாட்கள் உயிருக்குப் போராட்டம்!
இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் தீ்க்குளித்து தற்கொலை: 18 நாட்கள் உயிருக்குப் போராட்டம்!
Written By TamilDiscovery on Saturday, July 6, 2013 | 12:52 PM
Related articles
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !