Headlines News :
Home » » ஆச்சரியப் படவைக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வெள்ளரிக்காய்.

ஆச்சரியப் படவைக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வெள்ளரிக்காய்.

Written By TamilDiscovery on Monday, October 14, 2013 | 8:55 AM

பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கக்கூடிய காய்கறிகள் சில வகைகள் தான் உள்ளது. அவைகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய்.

பொதுவாக வெள்ளரிக்காய் பிடிக்காதவர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க முடியும். உலகத்தில் அதிகமாக விளையக் கூடிய காய்கறியில் வெள்ளரிக்காய் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக நிற்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

ஆகவே பச்சை நிறத்திலான திடமான வெள்ளரிக்காய்களை கை நிறைய அள்ளி ஷாப்பிங் பையில் போட்டு கொள்ளுங்கள். இவ்வளவு சின்ன வெள்ளரிக்காயில், இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா என்று தெரிந்தால் ஆச்சரியப்படவீர்கள். முக்கியமாக வெப்பத்தை தணிக்க உபயோகிக்கப்படும் வெள்ளரிக்காய் வேறு பல விதங்களில் நமக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. அவை அழகிலும் கூட பல விதத்தில் உதவி புரியும்.

உடல் வறட்சியை நீக்கும்:

தண்ணீர் குடிப்பதற்கு நேரம் கிடைக்காமல் வேலையாக இருக்கிறீர்களா? அப்படியானால் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். அதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது தண்ணீர் குடிக்காததை ஈடுசெய்யும்.

உடல் சூட்டை தணிக்கும்:

வெள்ளரிக்காய் உண்ணுவதால், உடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்திற்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் சருமத்தில் வெள்ளரிக்காயை சருமத்தில் தடவினால், சூரிய கதிர்களில் இருந்து அது உங்களை காக்கும்.

நச்சுப் பொருட்களை நீக்கும்:

வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்கும் ஒரு துடைப்பமாக விளங்குகிறது. அதனை சீரான முறையில் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும்.

தினசரி தேவையான வைட்டமின்களை நிரப்பும்:

வெள்ளரிக்காயில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இதனால் அதை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இதில் உள்ளது. இதனை இன்னும் சத்துள்ளதாக மாற்ற, அதனை கீரை மற்றும் கேரட்டுடன் சேர்த்து ஜூஸ் போட்டு குடியுங்கள். மேலும் வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுங்கள். ஏனென்றால் தோளில் தேவையான அளவு வைட்டமின் சி உள்ளது. அதிலும் அன்றாடம் தேவைப்படும் அளவில் 12% அடங்கியுள்ளது.

சருமத்திற்கு தேவையான கனிமங்களை அளிக்கும்:

வெள்ளரிக்காயில் அதிக அளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிகான் உள்ளது. அதனால் தான் ஸ்பா மற்றும் அழகு சாதன நிறுவனங்கள் பெரும்பாலும் வெள்ளரிக்காயை பயன்படுத்துகின்றனர்.

செரிமானம் மற்றும் உடல் எடை குறைவுக்கு உதவி புரியும்:

வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். ஆகவே இதனை சூப் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்காது என்றால் அதனை அப்படியே எடுத்து தயிரில் நனைத்து கொறிக்கலாம். அதனை மெல்லுவதால், தாடைக்கு நல்ல பயிற்சியாக அமையும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச் சிக்கலை நீக்கும்.

கண்களுக்கு புத்துயிர் அளிக்கும்:

வெள்ளரி துண்டை வீங்கிய கண்களின் மேல் வைத்துக் கொண்டால், மற்றவர்களுக்கு அந்த காட்சியை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்! அதில் அழற்சி எதிர்க்கும் குணங்கள் உள்ளதால், வீங்கிய கண்களுக்கு அவை சரியான நிவாரணியாக விளங்கும்.

புற்றுநோயை எதிர்த்து போராடும்:

வெள்ளரிக்காயில் செகோய்சொலாரிசிரேசினோல், லாரிசிரேசினோல் மற்றும் பினோரெசினோல் அடங்கியுள்ளது. இந்த மூன்று பொருட்களுக்கும் கருப்பை, மார்பகம், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்களை எதிர்க்கும் தன்மை உள்ளது.

சர்க்கரை நோய், கொழுப்பு மற்றும் இரத்தக் கொதிப்பு ஆகியவைகளுக்கு தீர்வு:

இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் தான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் என இரண்டிற்குமே வெள்ளரிக்காய் உபயோகப்படுகிறது.

வாயை நறுமணத்துடன் வைத்திருக்கும்:

வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை குணப்படுத்தி நற்பதமாக வைத்திருக்கும். அதற்கு ஒரு துண்டு வெள்ளரிக்காயை எடுத்து, வாயில் போட்டு கொறித்து ஒரு அரை நிமிடத்திற்கு அங்கேயே வைத்து விடுங்கள். அதிலுள்ள பைடோகெமிக்கல்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

முடி மற்றும் நகங்களை மென்மையாக வைத்திருக்கும்:

சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும் அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

மூட்டு ஆரோக்கியம் மற்றும் கீழ்வாதத்திற்கு நிவாரணம்:

ஏற்கனவே சொன்னது போல் வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும். அதிலும் இதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீழ்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

ஹேங்-ஓவரை சரிசெய்யும்:

காலை எழுந்தவுடன் ஏற்படும் தலைவலி அல்லது ஹேங்-ஓவரை சரிசெய்ய படுக்க போகும் முன், கொஞ்சம் வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ணுங்கள். வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் பி, சர்க்கரை மற்றும் எலெக்ட்ரோலைட்டுகள் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை புதுப்பித்து, ஹேங்-ஓவர் மற்றும் தலைவலி என இரண்டையுமே சரிசெய்யும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும்:

உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template