
உடற்ப்பயிற்சி என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். உடற்ப்பயிற்சியினால் ஏற்ப்படும் நன்மைகளை நாமே உணர முடியும்.
நாளாந்தம் சிறிது சிறிதாக ஆரம்பித்து நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க பயிற்சியையும் அதிகரித்து செல்லவேண்டும். ஆரம்பத்தில் உடலில் வலி ஏற்ப்பட்டாலும் நாட்கள் செல்ல செல்ல பயனை உணரமுடியும்.
சிலர் ஆரம்ப நாட்க்களில் ஏற்ப்படும் வலியினால் பயிற்சியினை நிறுத்தி விடுவார்கள். அவ்வாறு நிறுத்துவது தவறு. சுய நிலையில் இருக்கும் நமது உடலானது பயிற்சியை ஆரம்பித்த நாட்களில் தசைகளுக்கு கிடைக்கும் அழுத்தம் காரணமாகவே அவாறான வலிகள் ஏற்ப்படுகின்றது.
அதனால் உடலுக்கு பதிப்புகள் ஏற்ப்படப்போவதில்லை. புதிதாக ஆரம்பிக்கும் போது உடற்ப்பாகங்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியின் அளவினையும் எண்ணிக்கையையும் ஒன்றிலிருந்து மூன்று என்ற விகிதத்தில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வென்று என்கின்ற விகித்தில் எண்ணிக்கையால் அதிகரிக்க வேண்டும். சீராக செய்ய ஆரம்பித்த் பின்னர் பயனை நாளுக்கு நாள் உணரமுடியும்.
சிந்தனைத் திறன்:
சீரான உடற்ப்பயிர்சியினை மேற்க்கொள்வீர்களே ஆயின் உங்களை அறியாமலே சிந்தனைத் திறன் அதிகரிப்பதினை உணர முடியும். அத்துடன் சிறந்த முடிவுகளையும் எட்ட முடியும்.
இரத்த ஓட்டம்:
சீரானதும், சிறந்த்ததுமான இரத்த ஓட்டம், தசை இறுக்கங்களால் தடைப்பட்டிருந்த இரத்த ஓட்டமானது உடல் உறுப்புக்களின் சகல பகுதிகளுக்கும் சீராக எடுத்துச் செல்லப்படும். அத்துடன் இரத்தத்தில் ஒட்ட்சிசனின் அளவும் அதிகரிக்கும்.
உற்சாகம்:
சோம்பல் தன்மை விலகி எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். எந்த விதமான வேலைகளாயிருந்தாலும் உற்சாகத்துடன் ஈடுபட மனமானது இடமளிக்கும்.
மகிழ்ச்சி:
மனதினில் இனம்புரியாத மகிழ்ச்சி எப்போதும் காணப்படும். நல்ல சிந்தனைகள் உருவாகும். ஒழுக்கமான சீரிய சிந்தனைகளே எப்போதும் இருக்கும்.
தனம்பிக்கை:
உங்களை அறியாமலே உங்களுக்குள் தனம்பிக்கை பிறக்கும். எந்த காரியங்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கு தூண்டப்படுவீர்கள். எடுக்கும் முடிவுகள் சிறப்பானதாக இருக்கும்.
உடல் உறுப்புக்கள்:
உடற்ப்பயிசியின் போது பொதுவாக ஆண்கள் கட்டுடலை பேணுவதற்காகவே பயிற்சியில் ஈடுபடுகின்றார்கள். அனால் பயிற்சியின் போது உள் உறுப்புக்களில் மாற்றம் ஏற்றப்படாமல் வெளியே எந்த மாற்றமும் ஏற்ப்படப்போவதில்லை.
உடற் கூறுகளுக்கான பயன்:
வெளி அழகை கூட்டுவதற்க்காக பயிற்சியில் ஈடுபட்டாலும் அதிக பயனடைவது உள் உறுப்புக்களே, உள் உறுப்புக்களால் ஏற்ப்படுத்தப்படும் மாற்றமே வெளியே ஏற்றப்படும் மாற்றங்களுக்கு காரணமாகும். உள்ளுறுப்புக்களின் சிறந்த இயக்கமே உடலுக்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும். அவையே பின்னர் உடலை சிறந்த இயக்கத்திற்கு தக்க வகையில் வடிவமைக்கின்றன அதுவே கட்டுடலுக்கு காரணமாக அமைகின்றது.
சுவாசம்:
பயிற்சியின் போது உங்களை அறியாமலே உடல் ஒழுங்கு படுத்தல்களில் மாற்றங்கள் ஏற்ப்படும். அவ்மாற்றங்களில் ஒன்றுதான் சுவாசம். உடல் இயக்கத்திற்கு முக்கியமான சுவாசமானது சீராக இயங்க ஆரம்பிக்கும். பயிற்சி களைப்பின் போது வேகமாக சுவாசித்தாலும் பின்னர் ஆழ்ந்த நீண்ட சுவாசத்திற்கு வழிவகுக்கும். இது ஒர்ன்றே அனைத்தையம் மாற்றி அமைக்கும்.
கோபம், மன அழுத்தம், கவலை, களைப்பு, அனைத்தும் விலகும்.
உடற்ப்பயிற்சியின் சில பயன்களே இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது விரிவாக பார்ப்போமானால் இக்கட்டுரையானது மிக நீண்ட தொடராகவிருக்கும்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !